ஆட்டோவில் மதுபாட்டில்கள் மறைப்பு : போலீஸ் சோதனை சிக்கிய நபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் ஆட்டோவில் மதுபான பாட்டில்களைப் பதுக்கிவைத்துக் கொண்டு வந்த நபரை போலீஸார் பிடித்தனர்.


Advertisement

சென்னை கோட்டூர்புரம் விநாயகர் கோயில் சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஜீவா மணி (26) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Advertisement

"அன்புள்ள அப்பா" - காவல்துறை சார்பில் கடிதப் போட்டி

loading...

Advertisement

Advertisement

Advertisement