சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. 
 
image
 
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,630 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 41 மட்டுமே 25,902 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்குப்  பேர் உயிரிழந்துள்ளனர். ஆக இதுவரை 666 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
image
 
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சடலமாக கூவம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். 65 வயதான அவர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
loading...

Advertisement

Advertisement

Advertisement