JUST IN

Advertisement

புதிய வரைபடத்திற்கு நேபாள மேலவையிலும் ஒப்புதல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நேபாளம் நாட்டு நாடாளுமன்ற மேலவையிலும் இந்திய பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியப் பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட புதிய வரைப்படத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் தெரிவித்தது. நேபாள நாடாளுமன்றத்தின் 258 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர்கூட இதற்கு எதிராக வாக்களிக்கவில்லை. நாடாளுமன்ற மேலவையில் இந்த திருத்தம் ஒப்புதல் பெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று மேலவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

image


Advertisement

இதன் பின்புதான் நேபாள நாட்டின் குடியரசுத் தலைவர் இந்தப் புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா " வரைபடம் மாற்றம் பற்றி இந்தியா தனது நிலையை அதிகாரப்பூர்வமாக நேபாளத்துக்கு தெரிவிக்கும். நேபாளத்தின் நடவடிக்கை வரலாற்று ரீதியான, ஆதாரத்தின் அடிப்படையில் இல்லை. எல்லைப் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு நேபாளத்தின் நடவடிக்கை ஊறுவிளைவிக்கும். இந்த வரைபடம் செயற்கையானது" என கூறியுள்ளார்.

image

இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.


Advertisement

 இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக வரை படம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்த வரைப்படத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement