JUST IN

Advertisement

வெகுநாள் கழித்து வீடு திரும்பிய கணவன்! கொரோனா அச்சத்தால் வீட்டிற்குள் அனுமதிக்காத மனைவி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெகுநாள் கழித்து வீட்டிற்கு திரும்பிய கணவனை, கொரோனாவை காரணம் காட்டி மனைவி வீட்டிற்குள் அனுமதிக்காதச் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.


Advertisement

image

கடந்த சில வருடங்களுக்கு முன்பு காசநோயால் பாதிக்கப்பட்ட பாவா(46) என்பவர் குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.  கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது அவர்  ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் சாலையில் ஆதரவற்று நின்ற அவரை மீட்ட சில சமூக ஆர்வலர்கள் அவருடைய முகவரியை கேட்டு திருச்சி, துவாக்குடி மலை, மகாத்மா காந்தி தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்றிரவு விட்டுச் சென்றனர்.


Advertisement

image

ஆனால் அவரது மனைவி, காசநோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய கணவன் உடல் மேலும் மெலிந்து, மிகவும் சோர்வுடன் காணப்பட்டதை பார்த்தவுடன் ஒருவேளை அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வாசலிலேயே அமர வைத்து விட்டார். இரவு 12 மணி ஆகியும் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காததால், அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த  108 ஆம்புலன்ஸ் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement