மதுரையில் 8 வயது சிறுவனுக்கு தாய் கையில் சூடு வைத்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகர உண்மை வெளிவந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் கருப்பசாமி - முருகேஸ்வரி. இவர்களுக்கு 8 வயது மகன் உள்ளார். இந்நிலையில் முருகேஸ்வரி தனது மகனின் இடது கையில் சூடு வைத்துள்ளார். இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு ஆணையத்திற்கு ரகசிய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரி பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சூடு வைக்கப்பட்ட சிறுவன் அந்த தம்பதியினருக்கு பிறந்த குழந்தையே இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஆண் குழந்தை ஆசையில் சிறுவனுக்கு 2 வயது இருக்கும்போது சாலையோரத்தில் இருந்து தூக்கி வந்து வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத தத்தெடுப்பு சட்டத்தின்கீழ் கருப்பசாமி - முருகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கூடுதலாக சிறுவனுக்கு சூடு வைத்தது தொடர்பாக முருகேஸ்வரி மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் செக்காணூரணி போலீசார் 8 வயது சிறுவனை மீட்டு, மதுரையில் உள்ள வரவேற்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த தம்பதியினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் - மாநகர போக்குவரத்து கழகம்
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்