கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கொரோனா உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் பாதித்த பட்டியலில் தமிழகம் இராண்டாவது இடத்தில் இருக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கில் வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக நாள் தோறும் சுமார் 2 ஆயிரத்தை தொட்டு வருகின்றது. உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

image


Advertisement

சமீப காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னணி வீரர்களான காவல்துறையினரும், மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மருத்துவதுறை சார்ந்தவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement