கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் : 4வது இடத்தில் இந்தியா..!

Coronavirus-most-affected-country---India-move-on-4th-place

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றது.


Advertisement

உலக அளவில் 75,15,284 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,10,713 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 4,20,341 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு 20,71,489 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,08,556 குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,15,291 உயிரிழந்துள்ளனர். இதையடுத்து 7,75,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் 2ஆம் இடத்தில் உள்ளது. அங்கு 3,96,692 பேர் குணமடைந்துள்ளனர். 39,803 பேர் இறந்துள்ளனர்.

image


Advertisement

மூன்றாம் இடத்தில் 5,02,436 பேர் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா உள்ளது. அங்கு 2,61,150 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 6,532 பேர் மரணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 4ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.

image

இந்தியாவில் இதுவரை 2,97,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,46,074 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 8,321 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் இல்லை : ஐசிஎம்ஆர் திட்டவட்டம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement