ஊரடங்கால் வருவாய் இழப்பு: கூடைப் பின்னும் வழக்கறிஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொது முடக்கம் காரணமாக வருவாய் இழந்த வழக்கறிஞர் ஒருவர் கூடைப் பின்னும் தொழிலைச் செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமலானது. இந்த ஊரடங்கால் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். இந்த ஊரடங்கு வேலை வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளது. இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக வருவாய் இழந்த வழக்கறிஞர் ஒருவர் கூடைப்பின்னும் தொழிலைச் செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்

image


Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள தென்னங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் உத்தம குமரன். வழக்கறிஞரான இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். 2010ம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

பெரிய வழக்குகள் கிடைக்காவிட்டாலும் ஓரளவு வருவாய் ஈட்டும் அளவுக்குச் சென்றுகொண்டு இருந்த உத்தம குமரனின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டுள்ளது. வருமானம் இல்லாததால் தங்களது குடும்பத் தொழிலான கூடைப் பின்னும் தொழிலுக்குத் திரும்பியுள்ளார் வழக்கறிஞர் உத்தம குமரன். தனது மனைவி கீற்றுப் பின்னும் வேலை செய்வதாகவும் அதிலிருந்து வரும் வருமானம் போதவில்லை என்பதால் தான் கூடைப் பின்னத் தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

மேலும் வழக்கறிஞர் என்பதால் கூடைப்பின்னுவதால் இழுக்கு ஏதும் இல்லை என்றும், தன்னை போன்றவர்களுக்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்றும் உத்தம குமரன் தெரிவித்துள்ளார்.

முகக்கவசத்தை மறந்ததால் தனக்குத்தானே அபராதம் விதித்துக் கொண்ட காவல் அதிகாரி

loading...

Advertisement

Advertisement

Advertisement