JUST IN

Advertisement

சென்னையில் மட்டும் 1,21,950 கொரோனா பரிசோதனைகள்..! : மற்ற மாவட்டங்களில் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை மொத்தம் 31,667 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 16,275 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,92,970 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை எவ்வளவு என வெளியிடப்படாமல் இருந்த நிலையில், இன்று மாவட்ட ரீதியிலான எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

image


Advertisement

அதன்படி சென்னையில் இதுவரை மொத்தம் 1,21,950 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அரியலூர் - 3,950, செங்கல்பட்டு - 13,958, கோவை - 22,872, கடலூர் - 11,918, தருமபுரி - 9,854, திண்டுக்கல் - 7,582, ஈரோடு - 13,421, கள்ளக்குறிச்சி - 8,653, காஞ்சிபுரம் - 9,885, கன்னியாகுமரி - 18,366, கரூர் - 8,218, கிருஷ்ணகிரி - 6,565, மதுரை - 14,102, நாகை - 7,958, நாமக்கல் - 7,727, பெரம்பலூர் - 3,999, புதுக்கோட்டை - 6,243, ராமநாதபுரம் - 7,074, ராணிப்பேட்டை - 5,480, சேலம் - 22,751, சிவகங்கை - 5400, தென்காசி - 7,163, தஞ்சை - 17,820, தேனி - 16,945, நீலகிரி - 5,604, திருவள்ளூர் - 11,065, திருவாரூர் - 8,448, திருச்சி - 14,453, நெல்லை - 17,624, திருப்பத்தூர் - 9,911, திருப்பூர் - 8,153, திருவண்ணாமலை - 21,996, தூத்துக்குடி - 13,227, வேலூர் - 16,279, விழுப்புரம் - 9,795, விருதுநகர் - 10,803 எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் ஆகிய பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது.

“கொரோனாவை 20 நிமிடங்களில் கண்டறியும் கிட்” - ஹைதராபாத் ஐஐடி கண்டுபிடிப்பு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement