பொது முடக்கக் காலத்தில் தனது மகனிடம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் முடிவெட்டிக்கொண்டார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடி திருத்தும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடி திருத்தம் செய்வதை பொது முடக்கக் காலத்தில் ஊக்குவித்து வருகின்றனர். அண்மையில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தானே வீட்டில் தாடியைத் திருத்தம் செய்துகொண்டதாகப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், தன் மகணிடம் முடிவெட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தவான், “நீங்களும் என் மகன் போல உங்கள் வீட்டில் இருக்கும் செல்லக் குழந்தைகளுடன் முடித்திருத்தும் செய்துகொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக ஷிகர் தவான் தனது மகனுடன் டான்ஸ் ஆடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் லாரா நகைச்சுவை எமோஜி போட்டிருந்தார். அதை ஷிகர் தவானும் லைக் செய்திருந்தார்.
Loading More post
கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழியுடன் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அர்விந்த் கெஜ்ரிவால்
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை