8-ஆம் தேதிக்குள் வர வேண்டும்: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் புதிய உத்தரவு!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வரும் 8-ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


Advertisement

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

அதேசமயம் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 536 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,706 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கினால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் வரும் 8ஆம் தேதிக்குள் பணிசெய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

  சாலையில் சென்ற சார்பதிவாளரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்!! © 2020


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement