தெரு நாய்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்துள்ள சென்னை இளைஞரின் சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் தெரு நாய்கள் வழக்கம் போலச் சுற்றிக்கொண்டிருந்தன. அப்போது அங்கிருந்த ஒருவர் ஒரு நாயின் மீது கல்லை எறிந்துள்ளார். அதில் தலையில் பலத்த காயமடைந்த அந்தநாய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. இதனைக் கேள்விப்பட்ட கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அஷ்வத் என்பவர் அந்நாயை மீட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் நாயின் உயிர் காப்பாற்றப்பட்ட போதும், அதன் பார்வையோ பறிபோனது.
இதனையடுத்து நாயைத் தாக்கிய நபர் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அஷ்வத். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவலர்கள் நாயைத் தாக்கியது ஒரு மன நோயாளி என்பதைக் கண்டறிந்தனர். இந்நிலையில் அவரை மீட்டு தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் அஷ்வத் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து பார்வை இழந்த நாயைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற அஷ்வத், அதற்குத் தினமும் உணவளித்துப் பராமரித்து வருகிறார். சிறு வயது முதலே தெரு நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்ட இவர், பள்ளி காலத்திலிருந்தே தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். காலப்போக்கில் தெரு நாய்களின் மீதான பரிவு அதிகரிக்க, கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது காயமடைந்து கிடந்த நாய்கள், நோய் வாய்ப்பட்டுக் கிடந்த நாய்கள், பிறரால் தாக்கப்பட்டுக் கிடந்த நாய்கள் என சுமார் 300 நாய்களை மீட்டு அவைகளுக்கு உரியச் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த அனுபவங்கள் அவரை விலங்குகள் நல ஆர்வலராக மாற்றியது. தற்போது அவருடைய வீட்டிலேயே பல ஊனமுற்ற மற்றும் காயமடைந்த நாய்களுக்கு உணவளித்துப் பராமரித்து வருகிறார். இது குறித்து அஷ்வத், “ விலங்குகளும் நம்மைப் போன்ற ஒரு உயிரினம்தான். அதனைத் தாக்குபவர்களுக்கு மிகக்குறைந்த பட்ச தண்டனையாக அபராதம் விதிக்கப்படுகிறது. சட்டத்தில் திருத்தம் வந்தால் தான் விலங்களையும் உயிரினமாகக் கருதுவார்கள்” என்றார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு