JUST IN

Advertisement

''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நாயகியான பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா தொடர்பான மீம் ஒன்றை பகிர்ந்து "இவர் எனக்கு அழகாக தெரியவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார். இது சமந்தா ரசிகர்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. பூஜா ஹெக்டேவுக்கு எதிராக தங்களுடைய கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.


Advertisement

image

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் தனது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார் பூஜா ஹெக்டே. அதில், தனது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், கடந்த ஒரு மணி நேரத்தில் பகிரப்பட்ட, இயக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி சமந்தாவின் பதிவும் நீக்கப்பட்டு இருந்தது.


Advertisement

ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத சமந்தாவின் ரசிகர்கள் பூஜா ஹெக்டே சமந்தாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென பதிவிட்டு வருகின்றனர். #PoojaMustApologizeSamantha என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நடிகை சமந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதி என்பதை குறிப்பதை போல தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement