JUST IN

Advertisement

"கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ராயபுரமும் கோயம்பேடும் சவாலாக உள்ளன" - ராதாகிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ராயபுரம் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகள் சவாலாக இருப்பதாகச் சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


Advertisement

சென்னையில் மேற்கொண்ட ஆய்வுக்குப் பின்பு பேட்டியளித்த அவர் " ஆலந்தூர் , பெருங்குடி , அம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. நமக்குச் சவாலான பகுதிகளாக ராயபுரமும், கோயம்பேடும் உள்ளன. அதிலும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்குத் தொற்றின் அளவு அதிகம் ஆகும் பொழுது சற்று அச்சம் ஏற்படுகிறது . இப்போதைக்குக் குடிசைப் பகுதிகளில் நோய்த் தொற்றைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

image


Advertisement

மேலும் தொடர்ந்த ராதா கிருஷ்ணன் "நோய்த் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி முகக் கவசத்தை 100 சதவிகிதம் அணிய வேண்டும். சில பகுதிகளில் 15 சதவிகித மக்கள் தங்களுக்குத் தொற்று வராது என்று நினைத்து முகக் கவசம் அணிவது இல்லை. அவர்கள் மூலம் தொற்று பரவுகிறது" எனத் தெரிவித்தார்.

image

இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் " தற்போது தமிழகத்தில் மட்டும் தான் இறப்பு சதவீதம் 0.7 இருக்கிறது. இதனை மேலும் குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இப்போது புதிய கோணங்களில் நோய்த் தொற்றைத் தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது . சமூக பரவல் என்றால் தொற்று எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. சென்னையைப் பொறுத்தவரை நாங்கள் அதிகமாகச் சோதனை நடத்தி வருகிறோம். எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்று எங்களிடம் ஆதாரம் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement