ஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

image


Advertisement


இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் போது “ காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்டச் பகுதியில் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

image

இதனையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு ராணுவ அதிகாரி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார். படுகாயமடைந்த மற்றொருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement