முதல்முறையாகச் சென்னையில் 106.5 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பநிலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தாண்டு கோடைக் காலத்தில் சென்னையில் முதல் முறையாக 106.5 டிகிரி பாரன்ஹீட்  வெப்பநிலை பதிவாகியுள்ளது.


Advertisement

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் வெப்பம் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி பதிவாகியுள்ளது.

image


Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார்போல இன்று தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாகச் சென்னையில் 106.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை நுங்கம்பாக்கம் 106.3 பாரன்ஹீட் , மதுரை 106.5 பாரன்ஹீட், கடலூர் 104, வேலூர் மற்றும் திருத்தணி 106.3 பாரன்ஹீட் , திருச்சி 100.9 பாரன்ஹீட் , மதுரை விமான நிலையம் 102, தூத்துக்குடி 102, பரங்கிப்பேட்டை 103, புதுச்சேரி 102.5 வெப்பம் பதிவாகியிருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement