தமிழகத்தில் நேற்று மட்டும் 109.3 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி மீண்டும் தமிழக்த்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கியது. இதனால் கடந்த சனிக்கிழமை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தது. அப்போது டோக்கன் முறையில் மதுக்கள் விற்பனை செய்யப்பட்டன. சனிக்கிழமை மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆனது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை 133.1 கோடிக்கு மது விற்பனை ஆனது.
இந்நிலையில் நேற்றைய மது விற்பனையின் நிலவரம் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் 109.3 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. நேற்றும் மதுரையே அதிக வசூல் செய்துள்ளது.
சென்னை மண்டலம் - 6.5 கோடி
திருச்சி மண்டலம் - 27.4 கோடி
மதுரை மண்டலம் - 28.6 கோடி
கோவை மண்டலம் - 22.5 கோடி
சேலம் மண்டலம் - 24.3 கோடி
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி