JUST IN

Advertisement

ஊரடங்கு காலத்தில் இலவசமாகப் பால் விநியோகிக்கும் பாசமுள்ள பால்காரர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

பொது முடக்கத்தால் ஏழை மக்களுக்குத் தினசரி 200 லிட்டர் பாலை இலவசமாக வழங்கி வரும் மதுரையைச் சேர்ந்த இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

image


Advertisement

மதுரை அடுத்த சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஜெயராமன். இவர் 60 மாடுகளைப் பராமரித்து பால் விற்பனை செய்து வருகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இந்தப் பொது முடக்கக் காலத்தில் ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது. இதற்காகத் தான் விற்பனை செய்து வரும் பாலில் 50 சதவீதத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

image

நாள்தோறும் 450 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் ஜெயராமன் 250 லிட்டர் பாலை ஆவின் நிறுவனத்திற்கும், மீதமுள்ள 200 லிட்டர் பாலை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் கடந்த 25 நாட்களாக மட்டும் 250 லிட்டர் பாலை விற்பனைக்கு அனுப்பி விட்டு மீதமுள்ள 200 லிட்டர் பாலை காலை, மாலை என தலா 100 லிட்டர் வீதம், ஒருவருக்கு அரை லிட்டர் என இலவசமாக வழங்கி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வருமானத்தை இழந்து வாடும் ஏழை மக்களைக் கண்டறிந்து அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று இலவசமாகப் பால் விநியோகம் செய்து வருகிறார்.


Advertisement

 

இது குறித்து ஜெயராமன் கூறும் போது “கொரோனோ காலத்தில் ஏழை மக்களின் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்வது மனதிற்கு மிகுந்த ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறது" என்றார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement