JUST IN

Advertisement

ரூ.1 லட்சத்துடன் சாலையில் மயங்கிய நபர் - பத்திரமாக மீட்டு வீட்டில் ஒப்படைத்த காவலர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மணப்பாறையில், மயங்கி கிடந்த நபரின் பணமான ரூ.1 லட்சத்தை குடும்பத்தினரிடம் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 


Advertisement

image 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் தோகைமலையை சேர்ந்த கணேசன் மகன் சரவணன்(30). இவர் கடந்த புதன் கிழமை பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, கோவில்பட்டி சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற பார்த்தபோது, மக்கள் கூறியது போலவே ஜவுளிக்கடை வாசலில் ஆண் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். அவர் கொண்டுவந்த கைப்பையில் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கமும் இருந்துள்ளது.


Advertisement

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

 

image


Advertisement

உலக சாதனைக்காகக் காத்திருக்கும் பலாப்பழம் - ஆத்தாடி!
இதனையடுத்து விசாரித்தபோது அவர் காவல் நிலையம் எதிரில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் பாண்டியராஜன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்த சரவணன், பாண்டியராஜன் மற்றும் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். காவலர் சரவணனின் நேர்மையை பாராட்டிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் கடந்த வியாழக்கிழமை அவருக்கு வெகுமதி அளித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement