ஸ்ரீபெரும்புதூர்: போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்த ஒருவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்ரீபெரும்புதூரில் மது கிடைக்காத விரக்தியில் மாற்று வழியில் போதைக்கு முயற்சித்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.


Advertisement

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் மது கிடைக்காததால் மனதளவில் விரக்தி அடைந்ததாக தெரிகிறது. மாற்று போதை ஏற்றிக் கொள்ள வார்னிஷ் எனப்படும் திரவத்தில் குளிர்பானத்தை கலந்து சாமிநாதன் அவரது நண்பர்கள் 2 பேருடன் குடித்ததாக கூறப்படுகிறது.


Advertisement

image

மண்டல வாரியாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு தெரியுமா?

குடித்து சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த சாமிநாதன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement