அண்ணா சாலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்ணா சாலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் ஹாஜா மொய்தீன். இவர் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் வெயிட்டராக பணிப்புரிந்து வருகின்றார். இவர் கடந்த 10ஆம் தேதி ஜிபி சாலையில அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டு இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இவரது செல்போனை பறித்து சென்றனர்.

image


Advertisement

இந்தச் சம்பவம் குறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஹாஜா மொய்தீன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ராயப்பேட்டையை சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பறித்துச் சென்ற செல்போனை தேனாம்பேட்டையில் மெக்கானிக்காக உள்ள ஆதிகேசவன் என்பவரிடம் விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

Chennai: Man steals phone from store, held

செல்போனை வாங்கிய ஆதிகேசவனை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மீது பாண்டிபஜார், வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement