விழுப்புரம் மாணவி கொலை : தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் 7 நாட்களில் விசாரணை அறிக்கை தர வேண்டும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

விழுப்புரம் மாவட்டத்தின் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ என்பவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் குடிசை வீட்டை தன் கலைத்திறனால் அலங்கரித்த ஏழை மாணவன் !

அத்துடன் இந்த விவகாரத்தை குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்ப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement