JUST IN

Advertisement

10 கோடியை நெருங்கும் ‘ஆரோக்கிய சேது’ செயலி தரவிறக்கம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆரோக்கிய சேது செல்போன் செயலியை மத்திய அரசு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. கொரோனா குறித்து விழிப்புணர்வுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை மத்திய மாநில அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் கண்டிப்பாக தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென அரசு கூறியது.


Advertisement

தற்போது இந்த செயலியை 9.6 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலி குறித்து பேசிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், ஆரோக்கிய சேது செயலி மூலம் 650 கொரோனா ஹாட்ஸ்பாட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல 300 நோய்ப்பரவும் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

image


Advertisement

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!! 

69 மில்லியன் மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவும், 34 லட்சம் பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும் இந்த செயலி மூலம் தெரிவித்துள்ளனர். இந்த செயலி மூலம் 16ஆயிரம் பேருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இந்த செயலியில் பதிவிட்ட சுமார் 12,500 பேர் கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement