JUST IN

Advertisement

" ஜூலை மாதம் இந்தியாவில் கொரோனா உச்சத்தைத் தொடும்" - உலக சுகாதார அமைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் ஜூலை மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தைத் தொட்ட பின்பு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புத் தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் 59 ஆ.யிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஆனால் ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனா பாதிப்பிலிருந்து கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 17 ஆம் தேதி வரை நாடு முழுவதும் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

image


Advertisement

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்துப் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புத் தூதர் டேவிட் நபாரோ " இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாகக் குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டிய பின்புதான் குறையும். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாகத் தெரிந்தாலும் மக்கள் தொகையை ஒப்பிடும்போது, இது குறைவான எண்ணிக்கையாகவே இருக்கிறது. இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாகச் செயல்பட்டதால் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது" என்றார்.

image

இது குறித்து மேலும் தெரிவித்த அவர் " இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிறது. பொது முடக்கம் காரணமாக நோயை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கி விட்டார்கள். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் சில நகரங்களில்தான் நோய் அதிகமாக இருக்கிறது. பொது முடக்கத்தை நீக்கும்போது, நோய் பரவல் தன்மை வெடிப்பாக மாறும். ஆனால், அதைக் கட்டுப்படுத்தி விடலாம். இந்தியாவைப் பொறுத்தவரை ஜூலை மாதம் இறுதியில் இதன் தாக்கம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்" என்றார் டேவிட் நபாரோ.


Advertisement

image

இறப்பு விகிதம் குறித்துப் பேசிய அவர் " வயதானவர்களைக் கொண்ட நாடுகளில் கொரோனாவால் அதிக உயிர் இழப்பு உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பல வயதுடைய மக்கள் கலந்து இருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் நோய் பரவுதல் வேகமாக இல்லை என்றும் கூறலாம்" என்கிறார் டேவிட் நபாரோ.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement