எனக்கு அஸ்வின் மீது பொறாமையா ? - பதிலளித்த ஹர்பஜன் சிங் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உங்கள் மீது பொறாமைப்படுகிறேன் எனப் பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அப்படி இல்லை என்று ரவிசந்திரன் அஸ்வினிடம் இன்ஸ்டாகிராமில் நேரடியாகவே தெரிவித்துள்ளார் சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.


Advertisement

இப்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ஒரு காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். ஒரு சில போட்டிகளுக்கு ஹர்பஜன் சிங் மும்பை அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். என்றைக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆரம்பித்தாரோ அன்று முதல் தமிழில் ட்வீட் போடுவது என அமர்க்களப்படுத்தி வருகிறார் சிங்.

image


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டியளித்துள்ள ஹர்பஜன் சிங் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினிடம் நேற்று நேரடியாகவே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "கிரிக்கெட் ரசிகர்கள் பலர் நான் உங்கள் மீது பொறாமைப்படுகிறேன் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமோ நினைத்துக்கொள்ளட்டும். ஆனால் இப்போது விளையாடும் வீரர்களில் நீங்கள் மட்டுமே சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் என்று நான் சொல்ல விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

image

மேலும் இது குறித்துப் பேசிய சிங் " ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோனையும் நான் விரும்புகிறேன். அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதால் நான் அவர் எப்போதும் அங்கேயே இருக்க விரும்புகிறேன், அது சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பந்து வீசக் கடினமான இடம் . ஆனால் அஸ்வினாகிய நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கும் லெஜண்ட்டுகளில் ஒருவர். நிறைய நிறைய விக்கெட்டுகள் எடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார் ஹர்பஜன்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement