"ரசாயன ஆலையால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்" - ஆந்திர முதல்வர் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரசாயன வாயு கசிவால் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


Advertisement

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்‌வெங்கடாபுரம்‌ கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு ‌இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் கலந்து பரவிய விஷ‌வாயுவால் கிராமத்தினருக்குக் கண்கள் எரிச்சல் மற்றும்‌ மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

image


Advertisement

இந்தப் பாதிப்புகளால் இதுவரை 11 பேர் ‌உயிரிழந்துள்ளனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்தனர். தகவலறிந்து‌ ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ மனைகளுக்கு அனு‌ப்பினர்.

தீயணைப்புத் துறையினரும் மீட்புப்பணிக‌ளில் ஈடு‌பட்டுள்ளனர். 3 கிலோ மீட்டர் சுற்ற‌ளவில் வசிப்போரை மீட்‌டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரசாயன ஆலையில் நேரிட்ட விஷவாயு கசிவைக் கண்டறிந்து சீரமைக்கும் பணிகளைத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

image


Advertisement

இந்த விபத்து குறித்துக் கேள்விப்பட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். சிகிச்சை பெறுவோருக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவி செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement