மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மதிப்புக் கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றன.


Advertisement

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயை உயர்த்தும் வகையில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்படுவதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.3.25 காசும், டீசல் விலை ரூ.2.50 காசும் உயர்கின்றன.

image


Advertisement

இந்த விலை நாளை முதல் அமலுக்கு வரும் எனப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் அரசின் வருவாயை அதிகரிக்கவும், கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதியை அதிகரிக்கவும் இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஒரு கட்டடத்தின் மூலம் 41 பேருக்கு கொரோனா தொற்று - மக்கள் அதிர்ச்சி 

loading...

Advertisement

Advertisement

Advertisement