[X] Close >

சென்னையில் பெண் காவலர் மற்றும் அவரது சகோதரிக்கு கொரோனா !

Women-police-and-sister-affected-by-corona

சென்னையில் அடையாறு பகுதி காய்கறி வியாபாரி மற்றும் மதுரவாயலில் பெண் காவலரின் சகோதரிக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. நாள் தோறும் நூறுபேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நேற்றைய தினம் மட்டும் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான மதுரவாயல் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் மற்றும் அவரது சகோதரி கொரோனா உறுதியாகியுள்ளது.

image


Advertisement

மதுரவாயல் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர். 44 நாட்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தார். ஏப்ரல் 16 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் காவலரும், அவரது சகோதரியும் எங்கும் வெளியே செல்லவில்லை. இவர்களது வீட்டின் கீழ்தளத்தில் உள்ள நபருக்கு கடந்த 29 ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்படவே அந்த குடியிருப்பில் இருந்த அனைவருக்கும் 30 ஆம் தேதி தேதி மதுரவாயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளது.

இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை மாத குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

image


Advertisement

இதனிடையே, அடையார், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயது காய்கறி வியாபாரிக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர் திருவான்மியூர் சந்தையில் காய்கறி விற்பவர். இதுஒருபுறம் இருக்க சென்னையில் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் இருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close