[X] Close >

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Meteorological-Center-says-Rainfall-in-Tamil-Nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் கோடை மழை பெய்வது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

மகிழ்ச்சியான செய்தி.. இன்றும் ...

காவலர்களுடன் வாக்குவாதம் -தடுப்பு வேலிகளை தலையால் முட்டி தள்ளிய இளைஞர்

மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  இருக்கிறது எனவும் மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகப்பட்சம் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close