திருமணமாகி 2 மாதத்தில் பெண் தற்கொலை : கணவரின் குடும்பத்தினரே காரணம் என கடிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மீஞ்சூர் அருகே திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

திருவள்ளூரில் உள்ள வல்லூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பத்மப்ரியாவிற்கும், மேலூரை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆவடி காவலர் பயிற்சி பள்ளியில் காவலராக பணியாற்றி வரும் ராஜாராம், வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்து வருவதாக பத்மப்ரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பத்மப்ரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

image


Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பத்மப்ரியா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தனது இந்த நிலைக்கு காரணம் கணவரும், அவரது குடும்பத்தினரும் தான் என்றும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.

image

இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, தங்கள் மகளின் மரணத்திற்கு காரணமாகிய ராஜாராம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி இரண்டே மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் பொன்னேரி கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Advertisement

கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

loading...

Advertisement

Advertisement

Advertisement