JUST IN

Advertisement

அமெரிக்காவில் ஊரடங்கை நீக்கக் கோரி சான்டியாகோ கடற்கரையில் மக்கள் போராட்டம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை நீக்கக் கோரி சான்டியாகோ கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ பசிபிக் கடற்கரையோரத்தில் திரண்ட நூற்றுக் கணக்கானவர்கள் பொது முடகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருமே அதிபர் ட்ரம்புக்கு ஆதரவானவர்களோ அல்லது நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களோ அல்ல என்று அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர். 
 
Americans, Republicans oppose anti-coronavirus lockdown protests ...
 
இந்தக் கூட்டத்தில் ஜனநாயக கட்சியினர், குடியரசு கட்சியினர், அலை சறுக்கு விளையாடுபவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் கலந்து கொண்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாமல் தனி மனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு, திரளான மக்கள் ஒன்று கூடியிருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
What and who is behind the US anti-lockdown protests? | USA News ...
 
இதற்கிடையே, கொலரேடா, மிஸிஸிப்பி, மின்னேசோடா, டென்னிஸ்ஸி ஆகிய பகுதிகளிலும் பொது முடகத்திற்கு எதிரான போராட்டம் பரவி வருகிறது. இதற்கிடையே ஊரடங்கை தளர்த்துவதும், வர்த்தகம் மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பதும், பெரிய அளவில் நோய்த் தொற்றை பரவச் செய்து விடும் எனச் சுகாதாரத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
 
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement