“கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது” - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் உயிருக்கு அபாயம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் கூறியுள்ளார். 
 
 
கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க வேண்டிய தொலைவு நீண்டதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா  தொற்று சில நாடுகளில் குறைந்துவரும் நிலையில், மீண்டும் தொற்று கிளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
YouGov | International COVID-19 tracker: how public opinion is ...
 
ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பது கவலையடைய வைப்பதாக டெட்ராஸ் கூறினார். கொரோனா வைரஸ் நம்முடன் நீண்ட காலம் இருக்கப்போவதால், நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் என்று கூறிய டெட்ராஸ், பல நாடுகள், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முயன்றாலும் அது மிக அபாயகரமானதாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 
 
Update: COVID19 Resources for Urologists | Uroweb
வீட்டுக்குள் இருக்கும்போது மக்களுக்குச் சலிப்பும் ஏமாற்றமும் ஏற்படக்கூடும் என்றும், ஆனால் அவர்கள் வெளியே சென்றால் அவர்களின் உயிர், ஆபத்துக்குள்ளாவதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டெட்ராஸ் கூறியுள்ளார். கொரோனா தொற்றால் பாகுபாடு காட்டப்படுவதாக வரும் தகவல்கள் கவலையடைய வைப்பதாகவும், ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில் எந்தப் பாகுபாட்டுக்கும் இடம் அளிக்கக்கூடாது என்றும் டெட்ராஸ் வலியுறுத்தியுள்ளார்.
loading...

Advertisement

Advertisement

Advertisement