ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணா பல்கலை துணை வேந்தர்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவுக்கு எதிராக செயலி, இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,984 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 1596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 635 பேர் குணமடைந்துள்ளனர்.

பகவத் கீதை.. முதல்வர் ...


Advertisement

இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்தே மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக செயலி, இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

“உன்கிட்ட பதில் சொல்ல முடியாது” - குடிபோதையில் பெண் போலீஸிடம் தகராறு செய்த அதிமுக பிரமுகர்


Advertisement

பல்வேறு தளங்களை ஒருங்கிணைத்து பேரிடரில் இருந்து மக்களை காக்க செயலியை உருவாக்க வேண்டும். சிறந்த செயலி, இணையதளங்களை உருவாக்கினால் தேசிய அளவில் பரிசு வழங்கப்படும் எனவும் உரிய வேலைக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement