ஜி 20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது: ஆர்பிஐ ஆளுநர் பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் இந்தியப் பொருளாதார நிலை குறித்து அவர் விளக்கம் அளித்தார்.


Advertisement

அதில், கொரோனாவால் தற்போது பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவால் நிலவுகிறது.கொரோனா விவகாரத்தில் பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனிக்கிறது. உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மையே நிலவி வருகிறது. கொரோனாவால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழ்நிலைகளிலும் வங்கிகள் இயங்குகின்றன.

image


Advertisement

இந்தியாவில் அரிசி, கோதுமை போதிய அளவில் இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. 2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மையே நிலவி வருகிறது. ஜி20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது" என தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement