அசந்த நேரத்தில் அடிக்கிறதா சீனா?: சந்தேகம் எழுப்பும் பொருளாதார நிபுணர்கள்!!

Sebi-seeks-details-of-all-Chinese-investments-in-stock-markets

இந்திய பங்குச் சந்தைகளில் சீனா செய்துள்ள முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு அவற்றின் நிர்வாகங்களை பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement

வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய விவரங்களை செபி கேட்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கொரோனா சமயத்தில் சீனாவிலிருந்து வந்த முதலீடுகள் மற்றும் சீனா வழியாக வந்த முதலீடுகள் குறித்து செபி குறிப்பாக கேள்வி எழுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

image


Advertisement

இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி வங்கியான எச்டிஃஎப்சி லிமிடெட்டில், சீனாவின் மத்திய வங்கியான பீப்புள்ஸ் பேங்க் ஆஃப் சீனா தனது பங்கு விகிதத்தை, 0.8%ல் இருந்து 1.01%ஆக உயர்த்தியது. இது இந்திய நிதித்துறை வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

image

இந்தியாவின் முன்னணி தொழில், வணிக நிறுவனங்களின் பங்கு மதிப்பு வெகுவாக குறைந்துள்ள இந்நேரத்தை பயன்படுத்தி அவற்றில் சீனா மெல்ல தனது மறைமுக ஆதிக்கத்தை கொண்டு வர முனைந்துள்ளதா என பொருளாதார நிபுணர்களும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்நிலையில்தான் சீன முதலீடுகள் குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது.


Advertisement

பெரம்பலூர்: அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தை போதைக்காக குடித்த இளைஞர்கள்..!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement