ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிங்கள இளைஞர் மாயமானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜோய் மகன் அஜய் குமார் (30). சிங்களவரான இவர், கடந்த 2017ல் எவ்வித ஆவணமும் இன்றி தனுஷ்கோடி வந்தார். சட்ட விரோதமாக ஊடுருவிய இவர் மீது கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அங்கிருந்து விடுவிக்கப்பட்ட இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் தனி குடியிருப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு தனி துணை ஆட்சியர் சிவக்குமாரி, இலங்கை அகதிகள் குடியிருப்புகள் குறித்து நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். அப்போது அஜய் குமார் மார்ச் 17 ஆம் தேதி முதல் தனி குடியிருப்பில் இருந்து மாயமானது தெரிந்தது. அவரது புகாரின் பேரில் இலங்கை அகதிகள் சிறப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதே போல் இங்கு தனி குடியிருப்பில் போலீஸ் சிறப்பு கண்காணிப்பில் தங்கியிருந்த தயாபரராஜ்- உதயகலா தம்பதி தங்களது 3 குழந்தைகளுடன் கடந்த 10 மாதங்களுக்கு முன் மாயமனது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு: கொரோனாவால் பாதித்த 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!