#TopNews ஸ்டாலினின் கடிதம் முதல் குஜராத்தில் ஏற்பட்ட வன்முறை வரை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆயிரத்து 447ஆக அதிகரிப்பு. குணமடைந்தோர் எண்ணிக்கை 643ஆக உயர்வு.


Advertisement

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. ஊரடங்கு விவகாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிப்பார் எனத் தகவல்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்வு. 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தலைமைச் செயலாளர் அறிவிப்பு.


Advertisement

கோவையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா. 2 மற்றும் 3 வயது குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல். 

ஊரடங்கு குறித்த உரிய முடிவினை காலதாமதமின்றி அறிவியுங்கள் : முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

image


Advertisement

வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் புழல் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு முதல்முறையாக ஒருவர் உயிரிழப்பு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 71 வயது முதியவர் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்.

மக்கள் கூடும் சந்தைகளில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதைகளை அமைக்க வேண்டாம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா என்பது பற்றிய முடிவை தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்.முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம்

image

குஜராத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் அச்சத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். சொந்த ஊர் செல்ல அனுமதிக்கக்கோரி வாகனங்களுக்கு தீ வைத்ததால் வன்முறை.

கொரோனா கட்டுக்குள் வருவதற்குள் ஊரடங்கை நீக்கினால் பேரழிவு ஏற்படக்கூடும். சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

loading...

Advertisement

Advertisement

Advertisement