அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா - உடன் தங்கியிருந்த 29 பேருக்கு சோதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அகமதாபாத்திலிருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கியிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து சிலர் சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள அரபு பாடசாலை ஒன்றில் தங்கியிருந்தனர். அங்கு தங்கியிருந்தவர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவருக்கு கொரோனோ சோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் மதப்பிரசாரம் செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

 விற்பனைக்கு தயாராக இருந்த 180லிட்டர் சாராயம்! ஒருவர் கைது!

image

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !


Advertisement

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் அரபு பாடசாலையில் தங்கியிருந்த 29 பேர் உள்பட 39 பேர் கொரோனா சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். “39 பேரையும் ஸ்க்ரீனிங் செய்யும் பணி தற்போது தொடங்க உள்ளது. தொடர்ந்து Swab test க்கான மாதிரிகள் எடுக்கப்படும். அதன் முடிவுகள் நாளையோ அல்லது நாளை மறுதினமோ தெரிந்த பின்பு தான் இவர்களுக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரியும்” என கேஎம்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement