தனிமைப்படுத்தப்பட்டவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் திண்டுக்கல் காவல்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


Advertisement

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இந்தியாவில் தற்போது நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 421ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 114 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 326 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 45 பேரும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த 45 பேரின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை ட்ரோன்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.image

பேகம்பூர், நிலக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குத் தேவையான காய்கறிகள், பால், மளிகைப் பொருட்களை மாவட்ட நிர்வாகம் அந்தந்தப் பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்து வருகிறது.


Advertisement

கொரோனா பரிசோதனை முடிவுக்கு சில நிமிடங்கள் போதும்; இதுதான் ஆன்டிபாடி சோதனை!!

loading...

Advertisement

Advertisement

Advertisement