கேரளாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதிகாரி ஒருவர், அந்த விதிமுறையை மீறி உத்தரப்பிரதேசத்திலுள்ள சொந்த ஊருக்குப் பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டத்தில் சப் கலெக்டர் ஆக பணியாற்றி வருகிறார் அனுபம் மிஸ்ரா. இவர் உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அதன்பின்னர் இந்த அதிகாரி மார்ச் 18 அன்று சிங்கப்பூரிலிருந்து கேரளாவுக்குத் திரும்பியுள்ளார். ஆகவே விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமையில் 14 நாட்கள் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அந்த அறிவுறுத்தலைக் கடைப்பிடிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரது வீட்டிற்கு நேற்று அதிகாரிகள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டி இருந்துள்ளது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது நடமாட்டத்தைச் சோதித்துள்ளனர். அப்போது அவர் சொந்த மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூருக்குச் சென்றது தெரியவந்துள்ளது. அவரது செல்போன் எண்ணை வைத்துக் கண்டறிந்தபோது அவரது இந்தப் பயணம் அம்பலமாகியுள்ளது. அதிகாரிகள் தொடர்பு கொண்டு இவரைக் கேட்ட போது பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது மொபைல் அலைவரிசையை வைத்துப் பார்த்த போது அவர் கான்பூரில் இருப்பதைக் காண்பித்துள்ளது. மேலும், வீட்டிற்குச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்த்தபோது அவர் பூட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் பி அப்துல் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, தனது அலுவலகம் சார்பில் மாநில அரசிடம் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனுபமின் நடவடிக்கைகளில் பெரிய குறைபாடு இருந்துள்ளது. மேலிடத்திற்குத் தகவல் தெரிவிக்காமல் அந்த அதிகாரி ஏன் வெளியே சென்றார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளோம். ஆகவே இந்தக் குறிப்பிட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
அவர் வீட்டில் இல்லாததை அறிந்த உடனேயே அனுபம் மிஸ்ராவை அப்துல் நாசர் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் இவர் காவல்துறையினரை அணுகி, அனுபமின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள்தான் அனுபம் மிஸ்ரா கான்பூரில் இருந்ததைக் கண்டறிந்து கொல்லம் கலெக்டருக்கு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பலகட்ட தடைகளை விதித்துள்ள நிலையில் ஒரு அதிகாரியே அதனை மீறி நடந்துள்ளார் என்ற செய்தி அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கேரளாவில் மொத்தம் 176 பேர் கொரோனாவினால் பதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 39 பேருக்கு இந்தத் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளன.
Loading More post
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
கமல்ஹாசனின் 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை - வைகோ
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை