கொரோனா தொற்று தொடர்பாக வீட்டில் கண்காணிப்பில் இருந்த சென்னை பொறியாளர் வெளியே சுற்றியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா தொடர்பாக அரசின் உத்தரவை மீறியதாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
கொரோனா பாதித்த 18 பேரில் 10 பேர் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவரும், நெல்லை, கோவை, திருப்பூரில் தலா ஒருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்தவர் குறித்த விவரமும், எங்கு சிகிச்சை பெறுகிறார் என்ற விவரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. முதன்முதலில் பாதிப்பு கண்டறிப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் சிலர் அறிகுறியை மறைத்து தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ள அதே சமயம், சிலர் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி பொது இடங்களில் சுற்றித் திரிவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்தார். இது போன்ற நடவடிக்கைகளை அரசு இனி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியில் வந்தால் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்திருந்தார்.
‘கணவனிடம் இருந்து மனைவிக்கு, மகனிடம் இருந்து தாய்க்கு பரவியிருக்கிறது’ விஜயபாஸ்கர்
இந்நிலையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டட பொறியாளர் ஒருவர், துபாயில் இருந்து சென்னை வந்துள்ளார். அவரை 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதனை அவர் மீறியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில், அந்த நபர் மீது 2 பிரிவுகளில் கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு பிரகடனப்படுத்திய உத்தரவை மீறி செயல்படுதல், தொற்றுநோயை பரப்பக்கூடிய வகையில் கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் - மாநகர போக்குவரத்து கழகம்
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்