JUST IN

Advertisement

‘அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்’ : அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.


Advertisement

image

144 தடை உத்தரவும் இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


Advertisement

இந்நிலையில் உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:-

* 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் ஏப்ரல் 1 வரை வரை அமலில் இருக்கும்


Advertisement

* அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும்

* குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர அரசு அலுவலங்கள் மூடப்படும்

* 31ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்

* அம்மா உணவகங்கள் திறந்திருக்கும். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இடைவெளில் வரிசையில் நிறுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவர்

* 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்

* 26ஆம் தேதி நடைபெறும் பதினோறாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு

* இந்தத் தடை நடைமுறையில் உள்ள காலகட்டங்களில் நடைபெறுவதாக இருந்த திருமண விழாக்களில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிபடுவர்

* திருமணங்கள் நிறுத்தப்பட நேர்ந்தால் அதற்கான முன்பணத்தை மண்டப உரிமையாளர்கள் திரும்ப அளித்தாக வேண்டும்

* அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement