சுய ஊரடங்கை மீறி ஓமலூரில் இயங்கிய காய்கறி சந்தை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement


நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடித்து வரும் நிலையில், ஓமலூர் தினசரி காய்கறி சந்தை வழக்கம் போல் இயங்கியது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கொரோனா தாக்கத்தை தடுக்கும் வகையில் இன்று ஒருநாள் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே உள்ளனர். அதனால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஓமலூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.


Advertisement

image

அதேவேளையில் ஓமலூரில் உள்ள தினசரி காய்கறி சந்தையில், கடைகள் திறக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இங்கு குறைந்த அளவிலான மக்கள் வந்து பொருட்களை வாங்கி சென்றனர். ஆனால், பெண்கள் யாரும் வெளியே வரவில்லை. ஆண்கள் மட்டுமே
கடைகளுக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 370 பேர் பாதிப்பு !


Advertisement

image

தோனி சத்தமே இல்லாமல் ஓய்வு பெற்றுவிடுவார் - கவாஸ்கர்

அதேபோன்று சாலையோர இறைச்சிக் கடைகளும், மீன் கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதேபோன்று ஆங்காங்கே ஒரு சில டீ கடைகளும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் நலனிற்காக அரசு எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அவர்களாகவே முன்வந்து கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement