JUST IN

Advertisement

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 298 ஆக உயர்வு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 298 ஆக அதிரித்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Advertisement

அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 63 பேருக்கும், கேரளாவில் 44 பேருக்கும், தெலங்கானாவில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் 39 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், 23 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

பிரபல கிரிக்கெட் வீரர் ஆலையில் மதுபான தயாரிப்பு நிறுத்தம் ! 

கொரோனா பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிதாக வெளியிட்ட அறிவுரையின்படி, கொரோனா பாதித்தவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 முதல் 14 நாட்களுக்குள் ஒருமுறை சோதனை செய்யப்படவேண்டும் கூறப்பட்டள்ளது. இந்நிலையில், கொரோனாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய நடைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

image


Advertisement

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமான கவனிப்பு தேவையா...? - மருத்துவர். அனுராதா...! 

அதன்படி, சுவாச கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. முன்னதாக,கொரோனா அறிகுறி இல்லாமல் கடந்த 14 நாட்களில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள், 14 நாட்களில் அறிகுறி தென்பட்டவர்கள் மற்றும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதாரத்துறையினர் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement