JUST IN

Advertisement

"எல்லாமே சீனாவின் தவறுதான்"- ட்ரம்ப் கடும் தாக்கு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை சீனா மறைத்த குற்றத்திற்காக உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து வருகின்றன என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.


Advertisement

image

வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து முன்கூட்டியே சீனா தெரியப்படுத்தி இருந்தால், உலக அளவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்தி இருக்க முடியும் எனக் கூறினார். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது என்றும், குறிப்பாக கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை வெளியிடாததால், மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்றும் ட்ரம்ப் விமர்சித்தார்.


Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு: உயிரிழப்பு 4 ஆக உயர்வு 

image

கொரோனாவுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10041 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை தொடர்ந்து ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,284 ஆகவும், ஸ்பெயினில் 831 ஆகவும் அதிகரித்துள்ளது.


Advertisement

image

கொரோனா எதிர்கொள்ளல்: ரூ.20,000 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்தது கேரளா 

அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு உயிரிழப்பு 207 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 372 பேரும், பிரிட்டனில் 144 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 173 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 4பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement