செங்குன்றம் அருகே குடும்பத் தகராறில் கோபப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறிய பெண்ணை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம் பாடியநல்லூர், வடிவேல் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அம்பிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீள அமெரிக்க குடிமகன்களுக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்க திட்டம்
இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்த வண்ணம் இருந்து வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 16-ஆம் தேதி காலை விஜயகுமாருக்கும் அம்பிகாவும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பிகா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அனைவரும் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் அம்பிகா 16-ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியேறி 11.50 முதல் செல்போனை அணைத்து வைத்துள்ளார் எனவும் அவரை தேடி கண்டுபிடித்து தர போலீசார் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
''ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரி கொரோனா'' - உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை
இதுகுறித்து அம்பிகாவின் சகோதரர் சரவணன் கூறுகையில், “என் தங்கை காணமல்போய் இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 16-ஆம் தேதியே புகார் அளித்தோம். இப்போதுதான் எஃப்.ஐ.ஆர் காப்பியை பெற்றுள்ளேன். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களில் யாருக்காவது, அம்பிகா பற்றி தெரியவந்தால், 6382367007 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் காலமானார்!
மாவோயிஸ்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதல் - மதுரை வீரர் உயிரிழப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!