“வெளிநாட்டில் வச்சாவது ஐபிஎல் போட்டிகளை முழுசா நடத்துவோம்”: பிசிசிஐ புது பிளான்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் நடைபெற இருந்த 13 ஆவது ஐபிஎல் தொடர் ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்று காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரும் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இப்போது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதியையும் தாண்டி தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement

கொரோனாவால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனியின் நிலை என்ன ஆகும் ? : ஆகாஷ் சோப்ரா 

image

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 42 பேருக்கும், கேரளாவில் 27 பேருக்கும், ஹரியானாவில் 16 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் திட்டமிட்டப்படி ஏப்ரல் 15 ஆம் தேதியும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படாது. ஐபிஎல் போட்டிகள் குறித்து அண்மையில் பேட்டியளித்த சவுரவ் கங்குலி "இந்தாண்டு போட்டிகள் குறைத்து ஐபிஎல் நடத்தப்படும்" என தெரிவித்திருந்தார்.


Advertisement

image

ஆனால், இப்போது ஐபிஎல் நிர்வாகத்தினருக்கு போட்டிகளை குறைக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் போட்டிகள் இப்போதைக்கு இந்தியாவில் நடத்தும் சூழ்நிலை இல்லாததால் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக 60 போட்டிகளையும் நடத்துவதுதான் பிசிசிஐ திட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே 2009 இல் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்ததால் அந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.

image

போட்டிகளைக் குறைத்து ஐபிஎல் தொடரை நடத்தத் திட்டமா? 

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது "2009 இல் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. மொத்தம் 47 நாட்கள் நடைபெற்றது. இந்தாண்டு ஐபிஎல் பாதிப்போட்டிகள் இந்தியாவிலும் மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டிலும் விளையாடுவது போல வடிவமைக்கப்படும். இல்லையென்றால் மொத்தப்போட்டிகளும் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம். இவையெல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பின் சூழலை பொறுத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement