“டிவி ஷோக்களில் பேசுறதா என் வேலை?” : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விளாசும் அக்தர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.


Advertisement

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றினை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு கருத்துக்களை மனம் திறந்து பேசி வருகிறார். இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணியின் முன்னாள் வீரர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறது, ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதுபோன்று செய்வதில்லை என்று சோயிப் அக்தர் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

image


Advertisement

கொரோனாவால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனியின் நிலை என்ன ஆகும் ? : ஆகாஷ் சோப்ரா 


“சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தலைமை வகிக்கிறார். கிரீம் ஸ்மித் தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு தலைமை வகிக்கிறார். மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளராக உள்ளார். ஆனால், இவற்றிற்கெல்லாம் எதிர்மாறாக பாகிஸ்தானில் நடக்கிறது. என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயன்படுத்துவதில்லை. என்னுடைய வேலை டிவி நிகழ்ச்சிகளில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதில்லை. அவர்கள் என்னை கிரிக்கெட் ஆலோசனை சொல்ல அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான் அரசு கிரிக்கெட் வாரியத்தை மேம்படுத்துவதை நிறுத்திவிட்டது” என்றார்.

image


Advertisement

"இந்தியர்கள் பாகிஸ்தானுடன் போர் வேண்டாமென்றே நினைக்கிறார்கள்" ஷோயப் அக்தர் ! 


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவர் சோயிப் அக்தர். இவர் 1997 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். தனது வேகப்பந்துவீச்சில் உலக பேட்ஸ்மேன்கள் பலரையும் மிரட்டினார். 163 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 247 விக்கெட்டுகளையும், 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அத்துடன், 15 டி20 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement