“கமல்ஹாசன் காவல்துறையிடம் நடித்துகாட்ட வேண்டாம்” - உயர்நீதிமன்றம் உத்தரவு

High-Court-order-to-Kamal-Hassan-for-don-t-need-to-act-front-Police-in-Indian-2-Shooting-spot-on-Tomorrow

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் நாளை ஆஜராகி நடித்துக்காட்ட தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

இந்திய-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘விபத்து தொடர்பாக பரத்குமார் என்பவர் அளித்த புகாரில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், புரடக்சன் மேனேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 287, 337, 338 மற்றும் 304 (A) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

image


Advertisement

பிப்ரவரி 29ம் தேதி அனுப்பிய சம்மனில் மார்ச் 3 அன்று மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி விளக்கம் அளிக்க சொன்னார்கள். அவ்வாறு ஆஜராகி இடைவெளியில்லாமல் மூன்று மணி நேரம் விளக்கமளித்தேன். ஆனால் மறுபடியும், இ.வி.பி. பிலிம் சிட்டியில் மார்ச் 18ல் ஆஜராகி சம்பவ இடத்தில் நடந்ததை நடித்துக்காட்டும்படி மார்ச் 16ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன் அதிர்ச்சியளிப்பதுடன், துன்புறுத்தும் நோக்கில் இருப்பதாக தெரிகிறது. அரசியல் நோக்குடன் இதுபோல காவல்துறை செயல்படுவதாக தெரிகிறது. விசாரணை என்ற போர்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவால் நான் துன்புறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

image

அப்போது வாதிட்ட காவல்துறை தரப்பு, ‘விபத்து நடந்தபோது நடிகர் கமல் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவர் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கமல் மட்டுமல்லாமல் இயக்குனர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 24 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகன் என்பதற்காக புலன் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வருவதால் சட்டம் ஒழுங்கில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை’ என்று தெரிவித்தது.


Advertisement

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை : சாமானியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறதா?

இதைத்தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ‘இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விபத்து நடந்த இடத்திற்கு நாளை நேரில் ஆஜராக அவசியமில்லை. விசாரணைக்கு தேவைப்பட்டால் கமல் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானால் போதும்’ என தெரிவித்தார். அத்துடன் வழக்கையும் முடித்துவைத்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement