லாபம் இல்லை; சேவை...! - கேரளாவில் 2 ரூபாய்க்கு முகக்கவசம் கொடுத்த மருந்துக் கடை

Face-Masks-at-Rs-2--This-Shop-in-Kerala-Shows-Hope-in-Times-of-Health-Crisis

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முக கவசங்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும் நிலையில், கேரளாவில் 5 ஆயிரம் முக கவசங்களை தலா 2 ரூபாய்க்கு ஒரு மருந்துக் கடையினர் விற்பனை செய்துள்ளனர்.


Advertisement

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்த நிலையில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் முதன்மையான என்.95 முகக்கவசம் ஒன்று 200 ரூபாய் வரைக்கும், 3 அடுக்கு கொண்ட முகக்கவசம் ஒன்று 50 ரூபாய் வரைக்கும், சாதாரண முகக்கவசம் ஒன்று 30 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக மருந்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

image


Advertisement

அதிலும் கேரளாவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல இடங்களில் நிலவும் முக கவசங்களுக்கான தட்டுப்பாடை பயன்படுத்தி ஒரு முகக்கவசம் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கொச்சியில் உள்ள மருந்தகம் ஒன்று முக கவசம் ஒன்றை 8 முதல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்து 2 ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறது

image


Advertisement

கடந்த 8 ஆண்டுகளாகவே இதுபோன்று விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் சாதாரண மக்கள், மருத்துவமனை பணியாளர்கள், சிகிச்சை பெறுவோர் பெரிதும் பயன் அடைவதாகவும் மருந்துக்கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்: இறைச்சி விற்பனை வீழ்ச்சி - மீன் விலையேற்றம்! 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement